
தமிழக அரசே, டாஸ்மாக் நிர்வாகமே உடன் தலையிடு! சுமைப் பணி தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான 43 கிடங்குகளில் 2500க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள். மதுபான ஆலைகளில் இருந்து லாரிகளில் வரும் மதுபானபெட்டிகளை கிடங்குகளில் இறக்கி அடுக்கும் பணிக்கான கூலியினை மதுபான ஆலை நிர்வாகங்கள் இரண்டாண்டிற்கு ஒருமுறை உயர்த்தி வழங்குவது நடைமுறையில் இருந்துவருகிறது. இந்நிலையில் கடந்தமுறைஉயர்வு வழங்கப்பட்டு மூன்றாண்டுகள் முடிந்துவிட்டது. கடந்த ஓராண்டாக தொழிற்சங்கம் கூலி உயர்வை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அமைச்சரிடத்தில் நேரில் கடிதம் கொடுத்து பேசியும், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மற்றும் மதுபான ஆலை நிர்வாகங்களை பலமுறை வலியுறுத்தியும் இதுநாள் வரை பிரச்சனை தீர்க்கப்படாததால் 29.11.23 முதல் அனைத்து கிடங்குகளிலும் உயர்த்தி கேட்டுள்ளகூலியை வழங்குகின்ற மதுபான ஆலைகளின் பெட்டிகளை மட்டுமே லாரிகளில் இருந்து இறக்கி கிடங்குகளில்அடுக்குவது என்ற போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் காலங்கடத்தாமல் மதுபான ஆலை நிர்வாகங்கள் இறக்கு கூலி உயர்வினை வழங்கிட தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் உடனடியாக தலையிட வேண்டுமென தமிழ்நாடு சுமைப்பணி சம்மேளனம் சி.ஐ.டி.யு. வலிறுத்துகிறது.
இப்படிக்கு
R.வெங்கடபதி
மாநில தலைவர்
R.அருள்குமார்
மாநில பொதுச்செயலாளர்
8072745080
S.குணசேகரன்
மாநில செயல் தலைவர்.