கேளம்பாக்கம் அருகே சோனலூரில் இருசக்கர வாகனம் மீது தனியார் கம்பெனி பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி உயிரிழப்பு.

தனியார் கம்பெனி பேரூந்து நிற்காமல் சென்ற நிலையில் பணியாளர்களை ஏற்றியவாறு மீண்டும் அதே வழியில் வந்தபோது ஓட்டுனர் கோட்டிஸ்வரன்(44) கைது.

உயிரிழந்த தமோதரன்(53) மாமல்லபுரம் நகராட்சியில் துப்புரவு கண்காணிப்பாளராகவும், அவர் மனைவி ஜெயதுர்கா(47) செயிண்ட் மேரிஸ் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனர்,

இவர்களின் சொந்த வீடு தாம்பரம் மாடம்பாக்கத்தில் இருந்த நிலையில் அங்கு மகள் வசித்துவருகிறார். நேற்று இங்கு தங்கிய நிலையில் அதிகாலை இருசக்கர வாகனத்தில் வண்டலூர்- கேளம்பாக்கம். சாலையில் சென்றபோது சோனலூர் என்கிற இடத்தில் பின்னால் வந்த இடுங்காடுகோட்டையை சேர்ந்த ஹூன்டாய் கார் கம்பெனி பணியாளர்களை ஏற்றி செல்ல புதுப்பாக்கம் சென்ற போருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் புலனாய்வு விசாரணை செய்து வருகிறார்கள்…