கடந்த 23-ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.85,120 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதையடுத்து செப்.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 மற்றும் ரூ.90 என குறைந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,550-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.84,400-க்கு விற்பனை ஆகிறது.