
வாரத்தின் முதல் நாளான(திங்கள்கிழமை) தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8880க்கும், சவரனுக்கு ரூ. 1320 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.