சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார்.
123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 9,230 ரன்களை விளாசியுள்ளார். அதில், 30 சதங்களும், 31 அரைசதங்களும் அடங்கும். 7 முறை இரட்டை சதங்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக 254 ரன்கள் (நாட் அவுட்) எடுத்துள்ளார். இவர் கேப்டன் ஆக இருந்த போது இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.