
மதுராவில் உள்ள டெல்லி – ஆக்ரா விரைவுச்சாலையில் இன்று காலையில் மூடுபனியால் ஏற்பட்ட குறைந்த காணும் திறன் காரணமாக பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த மோதலுக்குப் பிறகு பல வாகனங்கள் தீப்பிடித்தன.
இதுகுறித்து பேசிய மதுரா மூத்த காவல் கண்காணிப்பாளர் ஸ்லோக் குமார், “இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மதுராவில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் நடந்த ஒரு பெரிய சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடர்ந்த மூடுபனி காரணமாக மோதிக்கொண்டு தீப்பிடித்தன. என்றார்