நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் 4 நாள்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும்7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

முதல்நாளில் மட்டும் இப்படம் ரூ.95.78 கோடி வசூல் ஈட்டிய நிலையில், முதல் வாரத்தின் இறுதி நாள்களில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 4 நாள்களில் ரூ. 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

எந்திரன், கபாலி, 2.0 திரைப்படங்களை தொடர்ந்து, ரஜினியின் நான்காவது படமாக ஜெயிலர் ரூ. 300 கோடி வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.