
சேலையூர் அருகே அடுத்த அடுத்த இரண்டு நாட்களாக பட்டம் பகலில் இரு பெண்களிடம் 5 சவரன் செயின் பறிப்பு, இரு சம்பவத்திலும் ஒரே நபர் ஈடுபட்டு இருக்கலாம் என சிசிடிவி காட்சியை கைப்பற்றி சேலையூர் போலீசார் விசாரணை
சேலையூரை அடுத்த ராஜகீழ்பாக்கம் மாருதி நகரை சேர்ந்த 70 வயது பெண்மணி சித்தாலஷ்மி, நேற்று மதியம் பால் வாங்க பிற்பகல் 1.30 மணிக்கு வீட்டருகே நடந்துசென்றார். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இரண்டு சவரன் நகையை பறித்து சென்றான்.
அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி சேலையூர் போலீசார் விசாரித்துவந்த நிலையில்
இன்று அதே பிற்பகல் 1.30 மணிக்கு கிழக்கு தாம்பரம் ஆஞ்நேயர் கோவில் தெருவை சேர்ந்த நித்திய(49) அருகில் உள்ள பள்ளியில் பிள்ளைகளுக்கு பணம் கட்டிவிட்டு வீடு திரும்பும் போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் 3 சவரன் நகையை பறித்து சென்றான்.
அதே சேலையூர் போலீசார் விசாரித்தபோது நேற்று செயின் பறிப்பில் ஈடுபட்ட அதே நபரை அங்க அடையாளமாக கூறினார்.
இதனால் இரு வேறு பெண்களிடம் செயின் பறித்த நபர் ஒரே நபர்தான் என அவனை பிடித்த தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்து அடுத்து நாட்களில் அதே பட்டம் பகலில் இருசக்கர வகனத்தில் செயின் பறிப்பு நடைபெற்றது பெண்களிடையே அச்சதை ஏற்படுத்தியுள்ளது.