சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சர்மா தெருவை சேர்ந்தவர் செந்தில் பிரசாத் (32),இவருடைய மனைவி ரன்ஜினி தேவி (30) இவருவரும் கிண்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வருகின்றனர்.

இன்று வழக்கம் போல் காலை ரன்ஜினி தேவி வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் இருந்த செந்தில் பிரசாத் செல்போனில் தொடர்பு கொண்ட போது எடுக்காததால் சந்தேகமடைந்த ரன்ஜினி தேவி வீட்டிற்க்கு சென்று பார்த்த போது பால்கனியில் செந்தில் பிரசாத் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சேலையூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை சோதனை செய்த போது நீல நிறத்தில் இருந்ததால் பால்கணியின் அருகிலேயே உயர்மின் அழுத்தம் மின்சார கம்பி செல்வதால் செல்போன் பேசி கொண்டிருந்த போது எதிர்ச்சியாக மின் கம்பி தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர் விசாரனை நடத்தி வருகின்றனர்.