தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வரும் டிசம்பர் மாதத்தில் இருந்தே இந்த ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு என்பது அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தற்போது நாடு முழுவதும் 5ஜி சேவைகளை வழங்கி வருகின்றன . இதற்கான பராமரிப்பு செலவுகள் அதிகரித்து இருப்பதால் தங்களுடைய வருமானத்தை ஈடுகட்ட ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.