மேலும் மழைக்காலத்திற்கு முன்பாகவே கால்வாய் பணிகளை துரித நடவடிக்கை கொண்டு முடித்து தருமாறு மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி முதன்மை செயல் பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரிஜாசந்திரன் திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை அவரிடம் பரிந்துரைத்து மக்கள் நலப் பணிகளை செவ்வனே முடித்து தருமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பகுதி திமுக நிர்வாகிகள் 39-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரிஜாசந்திரன், ஜெயபிரவீன், கஜபதி யோகநாதன், யுவராஜ், ஜெகன், பாபு, மணி குமார், சபரிநாதன், பவுன்குமார், தேவதாஸ், மொய்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.