வேளச்சேரியில் டிச.4 ஆம் தேதி கேஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க் சாலை சந்திப்பில் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கட்டடத்திற்குள் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து 8 பேர் சிக்கியிருப்பத்தாக கூறப்பட்டது.
கனமழை அதிகயளவில் பெய்து வந்ததால் மீட்புப் பணியில் ஈடுபட முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வந்த நிலையில், 6 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து 50 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்ட நரேஷ், ஜெயசீலனை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், 5 நாள்களாக நடைபெற்று வந்த தொடர் மீட்புப் பணியில், வெள்ளிக்கிழமை அதிகாலை நரேஷ் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த மீட்புக் குழுவினர் தற்போது மண்ணில் பதிந்திருந்த ஜெயசீலன் உடலை மீட்டுள்ளனர்