
மாநகர பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணிக்க இன்று முதல் டோக்கன் வழங்கப்படும்.
இன்று முதல் ஜூலை 31 வரை காலை 8.00 – இரவு 7.30 வரை 40 மையங்களில் டோக்கன்கள் தரப்படுகிறது.
ஜூலை முதல் டிசம்பர் வரை மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கானது வழங்கப்படும்.
40 மையங்களில் அடையாள அட்டைகள் புதுப்பித்தல் மற்றும் புதியபயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
இருப்பிடச்சான்று, வயது சான்று, 2 புகைப்படங்களுடன் வர வேண்டும் – என மாநகர் போக்குவரத்து கழகம். அறிவித்து உள்ளது.