
தி. நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனை நிறைவடைந்த பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.