
தமிழ் சினிமாவின் முன்னணி நடிக ரான அஜித்குமார். திரையுலகில் தனது 33 ஆண்டுகளை நிறைவு செய்தார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி
யிருப்பதாவது:-
சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்களை நிறைவு செய்கிறேன். எண்ணில் அடங்காத அளவுக்கு வெற்றி யும், தோல்வியும் சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் வெற்றி மீது நான் சந்தேகம் கொள்ளும்போதும் உங்கள் அன்புதான் என்னை மீண்டு வர செய்துள்ளது.ரசிகர்க ளின் அன்பை என் சுயலாபத்துக்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன். சினிமாவில் எனக்கான பாதையை வடிவமைத்து, வழிநடத்தி, என்னை நம்பி என் வளர்ச்சிக்கு உதவியவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ கத்தின் மதிப்பிற்குரிய தலைவர்கள், அதிகாரிகளுக்கு நன்றி. எனக்கு மதிப்புமிக்க பத்ம பூஷண் விருது வழங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்மு,பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அர சுக்கு நன்றி கூறுகிறேன். என் மனைவி ஷாலினி, குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக், பெற்றோர் மற்றும் என் குடும்பத் தினருக்கு நன்றி.என் நிறை குறைகள் அனைத்தையும் இந்த 33 வருடங்கள் ஏற்றுக் கொண்டு என் மீது அன்பு வைத்து கொண் டாடியதற்கு நன்றி. உங்களுக்கும், எனக்கும் என்றென்றும் உண் மையாக இருக்க முயற்சிப்பேன். என் மோட்டார் ரேசிங் கரிய ருக்கும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. உங்களையும் நம் நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.