சென்னை அடுத்த சிட்லப்பாக்கத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆனந்தஜோதி விநாயகர் மற்றும் பதமாவதி உடனுறை சீனிவாசபெருமாள் கோயில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது

சிட்லப்பாக்கம் ஜோதிநகரில் 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆனந்தஜோதி விநாயகர் மற்றும் பதமாவதி உடனுறை சீனிவாசபெருமாள் கோவில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது,

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாஹீதி நடைபெற்று புனித கலசநீரை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுரகலசங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது, அதனையொட்டி தீபாராதனை தீர்த பிரசாதம் வழங்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட அருள்மிகு ஆனந்தஜோதி விநாயகர் மற்றும் பதமாவதி உடனுறை சீனிவாசபெருமாள் ஆகிய சாமிகளை சிட்லப்பாக்கம் சுற்று வட்டார பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்,

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கவுன்சிலர் சி.ஜெகன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்,

அதுபோல் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, முன்னாள் பேரூராட்சி தலைவர் ரா. மோகன் உள்ளிட்டோர் குடமுழுக்கு விழாவில் கலந்துக் கொண்டனர்,

அதனை தொடர்ந்து இனிப்பு பொங்கல், பொங்கல், வடை, சுண்டல், சாம்பார் சாதம், தயிர் சாதம் என அறுசுவை உணவுகளை பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது

அன்று இரவே சாமி உச்சர்வர்களுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வான வேடிக்கைகளுடன் திருவீதி உலா நடைபெற்றது இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்