தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சிட்லபாக்கம் சி.ஜெகன் மற்றும் பரிமளா சிட்டிபாபு ஆகியோரால் அமைக்கப்பட்டுள்ள 12 மழை நீர் சேகரிப்பு குழிகளும் பருவமழைக்கு முன்பே தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. குரோம்பேட்டை ராஜ்பாரிஸ் நகர் -2, திருக்குறள் தெரு 1, உ.வே சுவாமிநாதன் தெரு 1 எண், பாம்பன் சுவாமிகள் சாலை -3, கலைவாணர் சாலை- 4 சுதா அவென்யூ- 1 ஆகிய இடங்களில் தூர் வாரும் பணிகள் நடந்தன.