இது அந்தப் பகுதியில் சாலையில் செல்வதற்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ஜெகன் ஏற்கனவே பதவியில் இருந்த ஆணையரிடம் தெரிவித்திருந்தார். அதன் பெயரில் புதிய ஆணையர் எஸ்.பாலசந்தர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டார். சிட்லபாக்கம் 1வது பிரதான சாலையில் கால்நடை மருத்துவமனைக்கு அருகில் உள்ள காலி இடத்தை தூய்மைப்படுத்தி அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தார். இதற்காக பொதுமக்கள் சார்பில் மாமன்ற உறுப்பினர் ஜெகன் நன்றி தெரிவித்தார்.