
தாம்பரம் சானடோரியம், அப்பாராவ் காலனி, 2வது தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (50).
இவர் ராயப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்,
இவரது மனைவி அமலா ஹாசல் (48), சித்த மருத்துவராக உள்ளார்.
தம்பதியருக்கு 12 வயதில் மகன், 8 வயதில் மகள் உள்ளனர்.
அவர்கள் இருவரும் சேலையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்,
இந்நிலையில் பள்ளி முடிந்து பள்ளி பேருந்தில் வந்த மகன் மற்றும் மகளை வழக்கம் போல அமலா ஹாசல் சானடோரியம், ஆஞ்சநேயர் கோவில் எதிரே வீட்டு பணிப்பெண் வேளாங்கண்ணி (30) உடன் 4 பேரும் ஜிஎஸ்டி சாலையை கடக்க முயற்சித்தனர்,
அப்போது குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று 4 பேர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக சென்றது,
இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் அமலா ஹாசல், அமரேஷ் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி அயப்பாக்கத்தில் காரை பறிமுதல் செய்தனர்,
மேலும் காரை ஓட்டிய வினோத் (32) என்பவரையும் கைது செய்தனர்.
வினோத் சானடோரியத்தில் உள்ள மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் உள்ள தனியார் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார் என தெரிய வந்தது, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது ஏன் என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்கள்,