
- வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- மகளிர் தினத்தை ஒட்டி பிரதமர் மோடி இந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்பை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார்.
- அவரது பதிவில், “இன்று மகளிர் தினம்.
- நமது அரசு எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 100 குறைக்க முடிவு செய்துள்ளது.
- இது லட்சக்கணக்கான இல்லத்தரசிகளின் பொருளாதார சுமையை வெகுவாக குறைக்கும்.
- பெண்களுக்கு எரிவாயு சிலிண்டர் விலை குறைவாக கிடைப்பதன் மூலம் குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கும் என பதிவிட்டுள்ளார்.