சமையல் எரிவாயு விலை ரூ.100 குறைகிறது

செங்கல்பட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த 2 சிறுமிகள் இன்று உயிரிழப்பு
செங்கல்பட்டில் சதாம் என்பவர் வீட்டில் நேற்று எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த 2 குழந்தைகள் இன்று உயிரிழந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரஜியா பர்வீன்(8), ஆப்தாப்(2) உயிரிழந்தனர்.
சென்னையில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து, ரூ. 1,960.50க்கு விற்பனை

சென்னையில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து, ரூ. 1,960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
பணம் பெற்றுக் கொண்டு சிலிண்டர் வழங்காத காஸ் ஏஜென்சி ரூ.8,500 இழப்பீடு வழங்க உத்தரவு

‘பணம் பெற்றுக்கொண்டு நுகர்வோருக்கு சிலிண்டர் டெலிவரி செய்யாத காஸ் ஏஜென்சி, 8,500 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த செக்குப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர், நாமக்கல்லில், சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஏஜென்சியின் வாடிக்கையாளராக உள்ளார். இவர் கடந்த, 2019 டிச.,ல் காஸ் சிலிண்டர் பெறுவதற்காக, ஆன்லைனில் புக்கிங் செய்து, மாற்று சிலிண்டருக்காக, 715 ரூபாய் செலுத்தியுள்ளார். பணம் செலுத்தி இரண்டு வாரம் […]
சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹26.50 காசுகள் உயர்ந்துள்ளது. சென்னையில் ₹1,942-க்கு விற்கப்பட்ட சிலிண்டர், தற்போது ₹1,968-க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ₹918-க்கு விற்பனையாகிறது.
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ. 101 விலையுயர்ந்து தற்போது 1999 என விறபனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்பவீட்டு உபயோகமற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தொடங்கிய ரஷ்யா -உக்ரைன் போர் காரணமாக கச்சாஎண்ணெய் விலை அதிகரித்ததைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை பல மடங்குஅதிகரித்தது. பின்னர் சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய்யின் மதிப்பு குறைந்ததைத்தொடர்ந்து மீண்டும் இந்தியாவில் […]
கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு
