ஜனாதிபதி திரௌபதி முர்மு மே 18ம் தேதி சபரிமலை தரிசனத்திற்காக கேரளா வரவுள்ளார்

இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக கேரளா வரும் அவர் 18 மற்றும் 19ம் தேதிகளில் அவர் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார்.

ஜனாதிபதியின் வருகையை ஒட்டி, தேவஸ்வம் போர்டும் காவல்துறையும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

சபரிமலையில் ஜனாதிபதி வரும் நாளில் கடுமையான பாதுகாப்பும் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படும். மெய்நிகர் முன்பதிவு உள்ளிட்ட ஏற்பாடுகள் மாற்றம் செய்யப்படும். வழக்கமான பக்தர்கள் அனுமதி அனேகமாக ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.

சபரிமலைக்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் வருவது இதுவே முதன் முறையாகும்.