
சகானா குறித்து சர்ச்சையில்க்குரிய வகையில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி பீகாரில் இந்து மத உணர்வை புண்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதான தர்மம் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார்.
அப்போது அவர் டெங்கு, கொசு, மலேரியா போன்றவை பற்றி தடுக்க கூடாது. அவற்றை ஒழிக்க வேண்டும். அதுபோலத்தான் சனாதான தர்மம் ஒழிக்க வேண்டும் என்று சர்ச்சையாக பேசினார்.
இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவருடைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அவரது பேச்சை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு மாநில நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பேச்சு சுதந்திரம் மற்றும் தனி மனித உரிமையை நீங்கள் மீறீ உள்ளீர்கள். நீங்கள் ஒரு சாதாரண ஆள் அல்ல. அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களுடைய பேச்சால் என்ன தாக்கம் ஏற்படும் என்பது தெரியுமா என உதயநிதிக்கு கேள்வி எழுப்பி இருந்தது. இந்நிலையில் பீகாரில் சனாதான பீகாரில் ஹர்ஷா நகர் போலீஸ் ஸ்டேஷனில் இந்து மத உணர்வை புண்படுத்தியதாக அமைச்சர் உதயநிதி மீது 298 வது சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .
ஏற்கனவே கர்நாடகாவில் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி அமைச்சர் உதயநிதிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.