இன்று கேள்வி நேரத்தை ரத்து செய்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யும்படி கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர்.

கள்ளச்சாராயத்தால் 55 பேர் பரிதாபமாக மரணமடைந்த அவலநிலை குறித்து விவாதிக்க வேண்டும்.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஷமுறிவு மருந்தான ஹோ பிரசோல் மருத்துக்கு பதில் அல்சருக்கு கொடுக்கும் மருந்து இருப்பதாக புதுச்சேரியில் போய் விவரம் தெரியாமல் பேசுகிறார்.

கள்ளச்சாரயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததால் சாவு அதிகரித்ததாக அமைச்சர் சொல்கிறார்.
காலதத்திற்கு அரசின் அலட்சியமே காரணம்.

கம்யூ. தலைவர் முத்தரசன், கள்ளச்சாராய விற்பனை குறித்து முதல்வருக்கும், டி.ஜி.பி.க்கும் தெரியாது என்கிறார்.
பிறகு எதற்கு இவர்களுக்கு பதவி.

  • எடப்பாடி பழனிசாமி கேள்வி