தாம்பரம் அடுத்த கெளரிவாக்கத்தில் 64 லட்சத்தில் குளம் சீரமைப்பு பணியை எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்தார். மண்டலகுழு தலைவர்கள் ஜெயபீரதிப் சந்திரன், இந்திரன் ஆகிய இருவருக்கும் இன்று பிறந்தநாள் என்பதால் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.

தாம்பரம் மாநகராட்சி 3 வது மண்டலத்திற்குட்பட்ட கெளரிவாக்கம் குளக்கரை குளம் கரைகள் இல்லாமல் முழுவதும் சிதிலமடைந்து கழிவுநீர் குட்டையாக காட்சியளித்தது.

இதனையடுத்து 3 மண்டலம் சார்பில் அம்ருத் திட்டம் 64 கோடியில் ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தி 215 மீட்டர் நடைபாதைகளுடன் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனை தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா அடிக்கல் நாட்டி குளம் சீரமைப்பு பணியை துவக்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டலகுழு தலைவர்கள் ஜெயபிரதிப் சந்திரன், இந்திரன், காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கிரிஜா சந்திரன், ஜெகன், உதவி பொறியாளர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது 1.2.2024 தேதியான இன்று பிறந்தநாள் காணும் மண்டலகுழு தலைவர்கள் ஜெயபிரதீப் சந்திரன்- இந்திரன் ஆகியோர் ஒருவரை ஒருவர் எம்.எல்.ஏ முன்பாக வாழ்த்துகளை தெரிவித்துகொண்டு சால்வைகளை அணிவித்து இணைப்புகளை பரிமாறிகொண்டனர்.

இதனையடுத்து மாடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 44 மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டிகளை தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா வழங்கினார். மண்டலகுழு தலைவர்கள் இந்திரன், டி.காமராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஏஞ்சலின்மேரி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் குழு தலைவர் லயன்.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.