பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டு அறிக்கையில்,
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் தன்னை சாமானிய மனிதர் என்று கூறி நடித்து வருகிறார். ஆனால் அவர் டெல்லியில் தனக்காக பிரம்மாண்ட சீஷ் மஹாலை உருவாக்கினார். அந்த மாளிகையில் இருந்து வெளியேறிய பிறகு தற்போது பஞ்சாபின் சூப்பர் முதல்வராக அவர் செயல்பட்டு வருகிறார். தற்போது டெல்லி மாளிகையைவிட சண்டிகரில் 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஆடம்பர மாளிகை அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது கேஜ்ரிவாலின் சீஷ் மஹால் 2.0 ஆகும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது