
தேவையான பொருட்கள்: வர கொத்தமல்லி 15 ஸ்பூன், மிளகு ஒரு ஸ்பூன், சுக்கு- 5 துண்டு, ஏலக்காய்- 15, நாட்டுச்சக்கரை -தேவைக்கு செய்முறை: முதலில் சுக்கு துண்டை இடிக்கிற கல்லில் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ளவும். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் பொடித்த சுக்கு, கொத்தமல்லி, ஏலக்காய், மிளகு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். ரொம்ப நைசா அரைக்க தேவையில்லை.கொஞ்சம் கொரகொரப்பாக இருந்தால் போதும் . இந்தப் பொடியை மூடி போட்ட டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும். தேவைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது. ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் சுக்கு மல்லி பொடி, நாட்டு சக்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் மழை நேரத்தில் வரக்கூடிய சளி, இருமல் தொண்டை வலி எல்லாம் சரியாகிவிடும். குளிருக்கு இதமா கம கமன்னு சுக்கு மல்லி காபி தினமும் சாயங்காலம் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.