திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியின்‌ கீழ்‌ ரூ.1.12 கோடி மதிப்பீட்டில்‌ புதியதாக கட்டப்பட்ட சமுதாய நலக்‌ கூடத்தை திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌.பாலு முன்னிலையில்‌ திறந்து வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா‌, பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ இ.கருணாநிதி தாம்பரம்‌ மாநகராட்சி துணை மேயர்‌ கோ.காமராஜ்‌, மண்டல குழு தலைவர்‌ வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.