குரோம்பேட்டை பாரதிபுரம் நெமிலிச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் முத்து மாரியம்மன் க்கு ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு வளையல் அலங்காரம் மற்றும் பெண்களுக்கு நலங்கு வைத்து வழிபாடு செய்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் இவ்வாலயத்தில் 28.07.2025 திங்கள் கிழமை முதல் 3.8.2025 ஞாயிற்றுக்கிழமை வரை ஆடி திருவிழா நடைபெறுகிறது மூன்றாவது வாரத்தை முன்னிட்டு அம்மனுக்கு ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் பகல் 12 மணிக்கு கூழ்வார்த்தல் 3 மணிக்கு அழகு குத்தும் நிகழ்ச்சி அம்மன் புறப்பாடு வீதி உலா நடைபெற உள்ளது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மன் அருள் ஆசி பெறுமாறு ஆலய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்