குரோம்பேட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்கம் பொதுக்குழு கூட்டம் மற்றும் 55 வது ஆண்டு விழா ரயில் நிலைய சாலை ராதா நகர் தெற்கு தெருவில் உள்ள குரோம்பேட்டை வியாபாரிகள் சங்க அறக்கட்டளை கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது காலை 11:00 மணிக்கு கடவுள் வாழ்த்து பாடி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானமும் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து வரவேற்புரை எஸ்.முருகேசன் நாடார் ஆற்றினார், வி. எஸ்.பி.மதிவாண நாடார் தலைமை உரையாற்றினார், பொதுச்செயலாளர் டி.எஸ். முருகேசன் நாடார் ஆண்டறிக்கை வாசித்தார், அதனைத் தொடர்ந்து எஸ்.டி. சேகர் பொருளாளர் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்து வாசித்தார் இந்நிகழ்ச்சியில் செயலாளர்கள் எஸ்.முருகேஷ் பாக்யராஜ் நாடார்,ஜி.டி.கிம் நாடார் மற்றும் நாடார் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் விழாவில் முடிவில் அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது நன்றி உரையை மோரிஸ் நாடார் வாசித்தார்.