
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் செல்போன் கடை, துணிக்கடையில் பின்பக்கம் துளையிட்டு 24 லட்சம் மதிப்புள்ள செல்போன், துணிகள் கொள்ளை
சென்னையை அடுத்த குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சென்னை மொபைல் பிளாசா எனும் செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடையை நடத்திவந்தவர் தமிம் அன்சாரி, நேற்று வழக்கம்போல் கடையை மூடி சென்ற நிலையில் இன்று காலை கடையை திறக்க முயன்றபோது கடையின் பின்பக்கம் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 20 லட்சம் மதிப்புள்ள புதிய செல்போன்கள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதே கடையில் பக்கத்து கடை ஜெனியாஸ் பேசன் மென்ஸ் வேர் கடையிலும் 4 லடச்ம் மதிப்புள்ள துணிகள் கொள்ளை போனது. இதன் உரிமையாளர் மன்சூர் அளித்த தகவலின் பேரில் குரோம்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தடயங்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்…