குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனமான சங்கர் கன்ஸ்ட்ரக்சன் சார்பில் அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில் ஸ்ரீ சாஸ்தா மஹால் என்ற பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவண்ணாமலை மங்கள காளி தேவஸ்தான ஸ்ரீ கருடானந்த சரஸ்வதி சுவாமிகள், மண்டபத்தை திறந்து வைத்து ஆசி வழங்கினார்.
தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் தில்லை வள்ளல்.
கே கே நகர் அருண் விஜய் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருணாச்சலம் முத்தையா, சென்னை மெப்ஸ் ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு செண்டை மேளம் வழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தனர்.
திறப்பு விழாவையொட்டி திருமண மண்டபம் வாழை, தென்னை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமண மண்டபம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 500 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மற்றும் ஆயிரம் பேர் வரை அந்த அரங்கில் வந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சாப்பாட்டு அறையில் 200 பேர் அமர்ந்து வசதியாக உணவு அருந்தலாம். மண்டபம் முழுவதும் குளு குளு வசதி செய்யப்பட்டு உள்ளது. மற்றும் மண வீட்டார் தங்குவதற்காக குளுகுளு வசதியுடன் 14 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.16 பேர் செல்லும் வகையில் மின் தூக்கி அமைக்கப்பட்டுள்ளது.
மற்றும் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் முகப்பில் விநாயகர் கோவில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. மின்சார தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஜென்செட் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டபத்திலேயே ஊஞ்சல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அஸ்தினாபுரம் பகுதியில் நவீன வசதி உள்ள அமைக்கப்பட்டுள்ள புதிய பிரம்மாண்ட திருமண மண்டபம் இதுவாகும். இதனை உருவாக்கிய சங்கர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது. சங்கரநாராயணன் மற்றும் அவரது துணைவியார் நித்யா சங்கர நாராயணன் ஆகியோர் இதனை உருவாக்கி நடத்தி வருகின்றனர்.
மண்டபம் சிறப்பு
விழாக்கு வந்த ஸ்ரீ கருடானந்த சுவாமிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை சங்கரநாராயணன் தம்பதியினர் வரவேற்று உபசரித்தனர். இவர்களது நிறுவனம் கடந்த 28 ஆண்டுகளாக தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகளையும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்டி கொடுத்துள்ளது. இதில் இதன் மூலம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்திற்கு உள்ளனர். இதனால் மக்களின் நன்மதிப்பையும் பெற்று குரோம்பேட்டை பகுதியில் முதன்மையான கட்டுமான நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.