குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் விசாகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாதாரணை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (19.11.23 ஞாயிறு) மாலை ஆறு மணிக்கு மேல் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத விசாகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற இருக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.