நண்பர்கள் அர்ப்பண மன்றம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குரோம்பேட்டையில் 5 கி.மீ தூரம் மாரத்தான் போட்டி நடத்தியது.

அதிகாலை முதல் திரண்ட ஆண்கள், பெண்கள் இருதரப்பிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்ட நிலையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

ஜி.எஸ்.சாலை, சி.எல்.சி சாலை, பச்சைமலை, துர்கா நகர் வழியாக மீண்டும் குரோம்பேட்டை பேரூந்து நிலையம் வந்தடைந்த அரக்கோணத்தை சேர்ந்த சாய்பிரகாஷ் முதலாவதாகவும் அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் சுரேந்தர் இரண்டாவது, சென்னை நவீன் மூன்றாவதாக வந்து பதக்கங்களுடன் பாராட்டு சான்றிதழ்களை பெற்றனர்.

மேலும் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்த பதக்கம் வழங்கும் விழாவில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியகராஜன், வாசன் ஐ.கேர் நிர்வாகிகள், மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, திமுக மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் அரவிந்தன், பகுதி செயலாளர்கள் பெர்ணன்ட், ஜெயகுமார்