குடி போதையில் கடலில் குளித்த எலெக்ட்ரிசியன் பலி

 கிழக்கு தாம்பரம், வாசுகி தெருவை சேர்ந்தவர் கண்ணன்(29).இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவரது நண்பர்களான ஏழுமலை,சோமு, பார்த்திபன் ஆகிய மூவருடன் சேர்ந்து கிழக்கு தாம்பரத்தில் மது அருந்தியுள்ளனர். பின்னர்  அதிகாலை 04.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பெரும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு வந்துள்ளனர். பின்னர் கவர்னர் கெஸ்ட் ஹவுஸ் பின்புறம் உள்ள கடற்கரை ஓரம் அனைவரும் உட்கார்ந்திருந்துள்ளனர்.  இதில் ஏழுமலை, சோமு, பார்த்திபன் ஆகிய மூவரும் போதையில் கடற்கரை மணலில் படுத்து விட்டனர். ஆனால் கண்ணன் மட்டும் போதையில் கடலில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் சென்று மீண்டும் பிணமாக  கரைக்கு வந்து வெளியே கிடந்தார். இதை அருகில் உள்ள மீனவர்கள் பார்த்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு    தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னைராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் நண்பர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகிறார்கள்.