
சென்னை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிதாய் கட்டபட்டுள்ள நவீன பேருந்த நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்ததோடு கொடியசைத்து பேருந்து சேவைகளை துவக்கி வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 2310 அரசு பேருந்துகளும் 840 ஆம்னி பேருந்துகளும் தென் மாவட்டங்களுக்கு செல்லகூடிய வகையில் இயக்கபட உள்ளதோடு புறநகர் பேருந்துகளும் இயக்கபடுகின்றது. மருத்துவமனை, புற காவல் நிலையம், நகரும் படிக்கட்டு, ஓய்வறை, மின் தூக்கி, வனிக மையங்கள், உணவகம், பெரியளவிலான வாகன நிருத்தம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டபட்டுள்ள இந்த பேருந்து முனையத்தில் இருந்து வரும் ஒன்றாம் தேதி முதல் பேருந்துகள் இயக்கபட உள்ளது. இதன் திறப்பு விழாவில் அமைச்சர்கள் மா.சுப்ரமனியம், சேகர்பாபு, தாமோ.அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சென்னை பெறுநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் கலந்து கொண்டனர்.