
திமுக எம்பி திருச்சி சிவா காமராஜர் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார் காமராஜரின் கடைசி காலத்தில் ஏசி வசதி இல்லாவிட்டால் அவர் உடம்பு தாங்காது. கொப்பளம் வந்துவிடும் என்பதால் அவர் தங்கும் அரசு விருந்தினர் மாளிகைகளில் ஏசி வசதி செய்ய கலைஞர் உத்தரவிட்டார் என்று கூறியிருந்தார்.இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி பாரதிய ஜனதாவைச் சேர்ந்த கரு. நாகராஜன் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.