2026ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்றது. அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள்…

1) முதலிடத்தில் இருப்பவர் கேமரூன் கிரீன். அவரை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

2) இரண்டாமிடத்தில் மதீஷா பதிரானா உள்ளார். அவரையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ. 18 கோடிக்கு பதிரானா ஏலத்தில் வாங்கப்பட்டார்.

3, 4) மூன்றாம், நான்காம் இடங்களில் இளம் வீரர்களான கார்த்திக் சர்மாவும் பிரசாந்த் வீரும் உள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதாகும் பிரசாந்த் வீர் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயதாகும் கார்த்திக் சர்மாவை தலா ரூ. 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்!

5) ஐந்தாமிடத்தில், இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் உள்ளார். அவரை ரூ. 13 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.