தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த நபரின் உடல் நிலை சீராக உள்ளது. இந்நிலையில், அவருக்கு கிளாட்-1பி வகை குரங்கம்மை தொற்று ஏற்பட்டிருப்பதை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.கடந்த 2022ல் ஆப்ரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் வேகமாக பரவக் காரணமானது கிளாட்-1பி வகை குரங்கம்மை வைரஸ். இதற்கு முன் இந்தியாவில் 30 பேருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அனைவருக்கும் கிளாட்-2 வகை வைரஸ் தொற்று இருந்தது. தற்போது வீரியமிக்க கிளாட்-1பி வகை வைரஸ் முதல் முறையாக இந்தியாவில் உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.