டெல்லி போன்று நகரங்கள் காற்று மாசு ஏற்பட்டுள்ள நிலையில் மரக்கன்றுகளை குழந்தைகள் போல வளர்தெடுக்க வேண்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏர்போர்ட் செக்டார் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜோஸ் மோகன் ஐ.பி.எஸ் பேச்சு….

அதுபோல் நல்ல செயல்கள் நின்றுவிடாது மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மனைவி பேச்சு:-

வண்டலூர் அருகே தாகூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் 250 க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், 2500 கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் இணைந்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

இந்த மரக்கன்று நடும் விழாவில் கலந்துக்கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏர்போர்ட் செக்டார் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜோஸ் மோகன் ஐ.பி.எஸ், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் மனைவி அருள்செல்வி விவேக், எஸ்னோரா இண்டர்நேஷனல் தலைவர் செந்தூர்பாரி, கல்லூரியின் தலைவர் டாக்டர் எம்.மாலா உள்ளிட்டோர் மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து உறுதி மொழியேற்றனர்.

அப்போது பேசிய மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்பெக்டர் ஜென்ரல் ஜோஸ் மோகன்:- டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு காரணமாக அன்றாட பணிகள் பாதிப்பு அடைந்துள்ளது அதனை மீட்க ஓவ்ஒருவரும் மரங்களை நேசிக்க வேண்டும். இயற்கையை பாதுகாத்து அனுபவிக்க வேண்டும் அதனால் மரக்கன்றுகளை குழந்தைகள் போல வளர்த்துதெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து பேசிய அருள் செல்வி விவேக்:- நல்ல செயல்கள் நின்றுவிடுவதில்லை, ஐய்யா அப்துல்கலாம் என் கணவருக்கு ஒரு கோடி இலக்கு கொடுத்தால் அவர் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். ஆனால் அவர் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் 40 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அவர் துவங்கிய கீரின் கலாம் திட்டம் தொடர்கிறது. அதனால் தான் நற்செயல்கள் நின்றுவிடவில்லை என்றேன். அதுபோல் மாணவர்களை நம்பி, பள்ளி கல்வி நிறுவனங்களில் நடப்படும் மரக்கன்றுகளை மாணவர்கள் வளர்தெடுப்பார்கள் என கூறினார்.