மதுரை தெப்பகுளம் பகுதியை சேர்ந்த மென்பொருள் பணியாளர் நந்தினி(25), சென்னை பெருங்குடியில் தங்கி அங்குள்ள தனியார் ஐ.டி கம்பெணியில் பணி செய்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு தாழம்பூரை அடுத்த பொன்மாரில் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு அதற்கு பூட்டும் போடப்பட்ட நிலையில் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் அறுக்கப்பட்டு துடிக்க துடிக்க எரிந்துகொண்டு இருதார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தாழம்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசாரும் உயிர் உள்ளதால் அவர அவசரமாக நந்தினியை மீட்ட
நிலையில் உன்னை கொலை செய்தவர்கள் யார், உனக்கு வேண்டியவர்கள் செல்போன் என் கொடு என கேட்டபோது ஒரு செல்போன் நெம்பரை நந்தினி கொடுத்துள்ளார்.

அதற்கு கால் செய்த போலீசார் சிறிது நேரத்தில் நேரில் வந்த நபர் தாம்பரம் அடுத்த மப்பேடூ பகுதியில் வசிக்கும் வெற்றிமாறன்(27) (எம்.பி.ஏ படித்தவர்) மதுரை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் என கூறியுள்ளார்.

எனக்கு தெரிந்த பெண் என பல்வேறு என்களுக்கு அவர்குறித்தும் நிலை குறித்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் நண்பர் வெற்றிமாறன் என நினைத்து அவசர ஊர்தியில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நந்தினியை அனுப்பியுள்ளனர்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் நந்தினி உயிரிழந்தார்.

கேளம்பாக்கம் உதவி ஆணையாளர் வெங்கடேசன், தாழம்பூர் ஆய்வாளர் சார்லஸ் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பல்வேறு தடயங்களை சேகரித்தனர். வெற்றிமாறன் எப்படி விரைந்து வந்தார். அவர் காலில் ஏன் செருப்பு இல்லை, என கோணத்தை மாற்றி மாற்றி விசாரித்ததில் வெற்றிமாறனின் நடவடிக்கையில் சிறிது மாற்றம் தெரிந்ததால் போலீஸ் பாணியில் விசாரித்தபோது ஒப்புகெண்டார்.

இருவரும் மதுரை பகுதியில் சிறுவயது முதலே நண்பர்கள் என்பதால் காதலித்துள்ளனர். ஆனால் வெற்றிமாறனுக்கு சமிபத்தில் மாற்றம் ஏற்பட்டு திருநங்கைகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நந்தினியிடமும் நெருங்கி வந்தாலும் சற்று விளகியுள்ளார் அதனால் நந்தினி பள்ளிக்கரணையை சேர்ந்த ராகுல் என்பவரிடம் பழகியுள்ளார்.

இந்த தகவல் அறிந்த வெற்றிமாறன் நேற்று நந்தினிக்கு பிறந்தநாள் என்பதால் சாப்பிட்ட பின்னர் பரிசு தருவதாக இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து கை, கால்களை சங்கிலியால் கட்டி கொண்டால் பரிசு என கூறி கொடுர செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்தது மேலும் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

சென்னை தாழம்பூர் அடுத்த பொன்மாரில் ஐ.டி கம்பெனி ஊழியர் நந்தினி(26) ( பி.எஸ்.சி ஐ.டி படித்தபவர்) என்பவர் கை,கால்களை சங்கிலியால் கட்டி பூட்டு போட்டு, வாயில் துணியை அமுக்கி கை,கால்களை அறுத்துவிட்டு உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிந்த நிலையில் மீட்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நந்தினி உயிரிழந்தார்.

இந்த கொலையில் வெற்றிமாறன் என்பவரை நெம்பரை நந்தினி கொடுத்த நிலையில் அவரை போலீசார் கிடுக்குபிடி விசாரணையில் இன்று நந்தினிக்கு பிறந்தநாள் என்பதால் நேற்று சப்பிரைஸ் கிப்ட் கொடுப்பதாக கண்ணை கட்டி அழைத்து சென்று கொலை செய்ததாக ஒப்புகொண்டான். மேலும் தன்னிடம் பழக்கதை விடவே இதுபோல் செய்ததாக கூறிய நிலையில் வெற்றிமாறன் என்கிற பாண்டி முருகேஷ்வரி(26) கைது செய்யப்பட்டார்.

மேலும் காவல் துறையினரின் தகவல் அறிந்து மதுரையில் இருந்து வந்த நந்தினியின் தந்தை ரவீந்திரன், அக்கா அமுதா ஆகியோர் நந்தினியின் நிலையை கண்டு கதறி அழுதனர்.

பின்னர் சன் செய்தியாளருக்கு அளித்த பிரித்தியோக பேட்டியில் அதிர்ச்சி தரும் தகவல் களை அளித்தனர்:-

மதுரையில் நந்தினி, பாண்டி முருகேஷ்வரி உள்ளிட்ட மூன்று தோழிகள் நண்பர்களாக பழகி பள்ளி சென்று வந்துள்ளனர்.

அப்போது பெண்கள் கல்லூரியில் நந்தினி சேர, பாண்டி முருகேஷ்வரி வேறு கல்லூரியில் படித்துள்ளார். அப்போது பாண்டி முருகேஷ்வரியில் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு பெண் என்பதை தாண்டி ஆண் குரல், மீசை உடல்வாகு மாரியுள்ளது.

இது குறித்து அவர்களின் பெற்றோர்களும் வீட்டை விட்டு அனுப்பிய நிலையில் நந்தினி மட்டும் தோழிதானே என ஆதரவாக பேசியும் பழகியும் உள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் பணி செய்ய வந்த நந்தினிக்கு பாண்டி முருகேஷ்வரியாக இருந்து திருநம்பியாக மாறிய (வெற்றிமாறன்(26) எம்.பி.ஏ. படித்தவர்) நபர் நேற்று முந்தினம் இரவு கொலை செய்துள்ளதாகவும் தங்கள் மகள், தங்கை எந்த விதத்திலும் காதல் செய்யவில்லை ஆதரவாகதான் திருநம்பியுடன் பேசியதாக கூறி கண்ணீர் மல்க கதறி அழுதனர்.

நந்தினி ஒரு கலங்கமற்ற பெண் என்றும், சக தோழி திருநம்பியாக மாரியும் அவரிடம் ஆறுதலாக பேசி வந்தது குடும்பதினருக்கு தெரியும் என்று கொலைக்கான காரணத்தை போலீசார் கண்டுபிடித்து திருநம்பிக்கு தக்க தண்டனை பெற்றுதரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.