அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்புப் பேட்டி அளித்திருக்கிறார். ‘’எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கு பரிந்துரை கடிதத்தை கொடுத்தவன் நான். கொடநாடு கொலை வழக்கில், A1-ல் இருக்கிறார் இபிஎஸ். பழனிசாமி எடுத்த முடிவுகளால் அதிமுக தொடந்து தோல்வியைத் தழுவியது. எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம்’’ என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.