பணம் என்னும் இயந்திரமே சோர்ந்து போகும் அளவிற்கு பணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது – பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பேட்டி

சேலையூர் – அகரம் தென் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராகுல் காந்தி ஊழல் மையம் என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜானகிராமன், மண்டல தலைவர் செம்பாக்கம் பாலசுப்ரமணியம், கிழக்கு தாம்பரம் கோரல் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசுகையில் :
எங்கெல்லாம் ஊழல் இருக்கிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒருவர் இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தீரஜ் சாகு என்கின்ற காங்கிரஸ் முக்கிய நபர் வீட்டிலிருந்து 351 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
15 பீரோவில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது பணத்தை என்னும் இயந்திரமே சோர்ந்து போகும் அளவிற்கு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவர் மது ஆலை நடத்தி வருகிறார், அவருடைய மது ஆலை வன அனுமதியின்ற கட்டப்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் வழக்கும் பதிவு செய்யப்பட்டு அவருடைய அரசியல் பலத்தின் மூலம் அந்த வழக்கை கையாண்டு வருகிறார்.
சுதந்திர இந்தியாவில் 351 கோடி ரூபாய் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை.
அதிமுக ஆட்சியில் இருக்கும் போது திமுக நிவாரண பணம் வங்கி கணக்கில் தான் அளிக்க வேண்டும் என கூறியது.
ஆனால் இப்பொழுது குடும்ப அட்டைகள் மூலம் கொடுக்க முன் வருகிறது.
இப்படி மாற்றி, மாற்றி பேசுவதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
ஸ்ரீரங்கம் கோவிலில் தேவையில்லாத அசம்பாவிதம் ஒன்று நடைபெற்று உள்ளது.
அங்கு சென்ற பக்தர்களை கோவில் நிர்வாகத்தினர் அடித்துள்ளனர் கோவிலுக்குள் ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. இதெல்லாம் இந்த அரசு வாயை பொத்தி கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
உடனடியாக விசாரணை மேற்கொண்டு யார் மீது தவறி இருக்கிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையில் இந்து அறநிலையத்துறை என்பது ஒரு பொறுப்பற்ற துறையாகவே செயல்படுகிறது. இப்படி பொறுப்பற்று செயல்படுவதால் தான் அரசை ஆலயத்தை விட்டு வெளியேறு என கூறுகிறோம் என தெரிவித்தார்.
காங்கிரஸ்காரர்கள் தவறு செய்தால் ராகுல் காந்தி மீது கூறுவது பாஜக காரர்கள் தவறு செய்தால் பாஜகவுக்கு சம்பந்தம் இல்லாதது போல் பேசுவதும் ஏன் என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆர்.கே.சுரேஷ் வந்திருக்கிறார், நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
ராகுல் காந்தியும் ஆர்.கே.சுரேஷ் ஒன்றா? இருவரும் ஒன்று என்றால் கூறுங்கள் பதில் சொல்கிறேன் யாராக இருந்தாலும் ஒன்றுதான் அவர் தவறு செய்திருந்தால் தூக்கி ஜெயிலில் போடட்டும் யாரும் வேண்டாம் என்று கூறவில்லை.
திமுகவை சார்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒரு பெண்ணை கற்பழித்து சிறை சென்றார் அதனால் திமுக காரர்கள் அனைவரும் அப்படித்தான் என்று கூற முடியுமா.
ஆனால் திமுக தலைவர் மீது ஒரு குற்றம் வந்தால் அதற்கு திமுகவைச் சார்ந்த அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
அந்த விசாரணையில் நாம் தலையிட முடியாது இந்த வழக்கை யார் விசாரிக்கிறார் திமுக அரசாங்கத்திற்கு இருக்கக்கூடிய காவலர் பொருளாதார குற்றப்பிரிவு நாங்கள் யாரும் தலையிடவில்லை யாரை வேண்டுமானாலும் அழைத்து விசாரிக்கலாம்.
யார் தவறு செய்தாலும் ஒன்று தான் குற்றம் குற்றம் தான் மக்களை ஏமாற்றி குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் அதை தான் பாஜகவும் வலியுறுத்துகிறது.
இதை தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கூறுகிறார்.
எங்கள் கட்சியின் பெயரை வைத்து தவறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது நாங்களே வழக்கு கொடுத்து அவர்களை கைது செய்துள்ளோம்.
தொடர்ந்து குற்றவாளிகள் பாஜகவில் இணைவது குறித்து கேட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல
ஆனால் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தண்டனை அனுபவிக்கபட்டால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க தான் வேண்டும்.
சமூக விரோதிகளை நாம் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது அதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஒரு சில பேர் திருந்தி புதிய வாழ்வை வாழவேண்டும் என நினைத்தால் தவறு இல்லை என்றால் செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து விடுகிறார்கள். மீண்டும் கட்சியில் இருந்து கொண்டு அது போன்ற குற்றங்களை செய்பவர்களை பாஜக கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.
அவர்களை கட்சியில் இணைப்பதே தவறு என்றுதான் நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.