உடலில் உப்பு அதிகமாக சேரும் போது பல்வேறு அறிகுறிகள் தோன்றும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிக உப்பு உட்கொள்வது ரத்த அழுத்தம் உயர்வு உள்ளிட்ட உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

தொடர்ந்து தாகம் அதிகரித்தல், முகம் மற்றும் கைகள் வீக்கம், வயிறு உப்புசம் அல்லது வீக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தலைவலி போன்றவை உப்பு அதிகமாக உட்கொள்வதற்கான முக்கிய அறிகுறிகளாக குறிப்பிடப்படுகின்றன.

மேலும், தூக்கக் குறைபாடு, உடல் எடை திடீர் அதிகரிப்பு, செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். நீண்ட காலமாக அதிக உப்பு உட்கொள்வது இதய நோய், சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் உயர்வு அபாயம் உள்ளிட்ட தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.