இந்தியாவில் சுமார் 67 லட்சம் குழந்தைகள் ஒரு நாள் முழுவதும் உணவின்றி தவிப்பதாக ‘JAMA Network Open’ என்ற இதழில் வெளியான ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 6 முதல் 24 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளில், நாள் முழுவதும் பால் உள்ளிட்ட எந்த ஒரு உணவும் இன்றி தவிக்கும் குழந்தைகளே ‘ஜீரோ ஃபுட் குழந்தைகள்’.
  • இந்த ’ஜீரோ ஃபுட்’ குழந்தைகள்’ பாதிப்பில், இந்தியா 19.3 சதவீதத்துடன் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான உணவை வழங்க இயலாததே இந்த நிலைக்கு முக்கிய காரணம்.
  • 2019-2021க்கான மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.