சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் ஆணை

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அன்ஜாரியா அமர்வு தீர்ப்பு

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கும் அபராதத்துடன் தள்ளுபடி

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்

ஒரு வாரத்துக்குள் சி.வி.சண்முகம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்தாவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் – தலைமை நீதிபதி

அபராதம் விதித்ததற்கு சி.வி.சண்முகம் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தபோது ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கவா? என நீதிபதி கேள்வி

அரசியல் பிரச்சனையை தேர்தல் களத்தில்தான் பேசிக் கொள்ள வேண்டும் என கூறி வருகிறோம் -நீதிபதி

சட்டத்தை தவறாக புரிந்துகொண்டு அதிமுக வழக்கு தொடர்ந்திருப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டனம்