
நாட்டின் 76 சதவீத மக்கள், அதிகம் முதல், மிக அதிக வெப்ப அபாயத்தில் உள்ளதாக, டில்லியை சேர்ந்த சி.இ.இ.டபிள்யூ., எனப்படும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் சிந்தனைக்குழாமின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
- கடந்த 10 ஆண்டுகளில் அதிக வெப்பமான பகலை விட, அதிக வெப்பம் நிறைந்த இரவுகள் அதிகரித்துள்ளன.
- டில்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோவில் அதிகாலை வெப்பம் 6 – 9 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதீத வெப்பமுள்ள இரவுகள் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
- இந்த அதீத வெப்பத்தால், 3.50 கோடி நிரந்தர வேலை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்தை, 2030ல் நம் நாடு இழக்கும் அபாயம் உள்ளது