பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் 81 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் 30 ஆண்டு கோரிக்கையான புதிய பேருந்து நிலையம், நிழற்குடைகளை
பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்தார்.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அப்பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்து மூலம் சென்று வருவது வழக்கம்.
இவ்வாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிலையத்தின் நிலம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
சம்பந்தப்பட்ட நிலம் நகராட்சிக்கு சொந்தமானது என்பதால் அதை மீட்க எம்.எல்.ஏ இ.கருணாநிதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பில் நிலம் அரசுக்கு சொந்தமானது என உறுதியானதை தொடர்ந்து அந்த நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 60 லட்சத்தில் 1750 சதுர அடியில் ஆறு பேருந்துகள் நிற்கும் படி பேருந்து நிலையம் அமைக்கவும்,

அதே பகுதியில் காயத்ரி நகர், குமரகுன்றம், ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள கோரல் அப்பார்ட்மெண்ட அருகே என 3 இடங்களில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 21 லட்சத்தில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்கும் எம்.எல்.ஏ இ.கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் அந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் மற்றும் 3 பேருந்து நிழல் குடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி கலந்துகொண்டு புதிய பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிழல் குடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
உடன் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் மகாலட்சுமி கருணாகரன், சரண்யா மதுரைவீரன், சரஸ்வதி சந்திரசேகர், சங்கீதா விஜய், பகுதி கழக செயலாளர்கள் கருணாகரன், பெர்னாட், சமூக ஆர்வலர் டாக்டர்.வி.சந்தானம், நல சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.