
அமெரிக்காவில் உலகளவிலான பதற்ற நிலை அல்லது போர்ப் பதற்றம் ஏற்படும் போது மட்டுமே அமெரிக்க அதிபரின் ரகசிய விமானங்களில் ஒன்றான டூம்ஸ்டே விமானம் (Boeing E-4B Nightwatch) பறக்கவிடப்படும்.
இந்த நிலையில், சுமார் 51 ஆண்டுகால வரலாற்றில் கடந்த வாரத்தில் அமெரிக்க வான்வெளியில் டூம்ஸ்டே விமானத்தைக் கண்டதாக பலரும் தெரிவித்தனர்.
டூம்ஸ்டே, மிகவும் ரகசியமான ஒரு போர் விமானம். தரையில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை வரும் போது, அதிபரும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இந்த விமானத்தைப் பயன்படுத்திக் கொள்வர்.
விமானத்தில் பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகள், அறைகள் உள்ளிட்ட தேவையான வசதிகள் இருக்கும். ராணுவ கட்டளைகள் மட்டுமின்றி, அணு ஆயுதத் தாக்குதல் உத்தரவைக் கூட பிறப்பிக்க முடியும்.