சென்னை அடுத்த அமெட் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை, 9 ஆயிரம் பேர் கண் தானம் பட்டியலை தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு மாநில திட்ட அலுவலர் டாக்டர் எஸ்.வி.சந்திரகுமாரிடம் ஒப்படைத்தனர்

ஒரே நேரத்தில் 9 ஆயிரம் பேர் கண் தானம் மிக பெரிய சாதனை, தமிழ்நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக பெருமிதம்

சென்னை அடுத்த கானத்தூரில் அமெட் பல்கலைக்கழகம் சார்பில் “விழி கொடுத்து வாழ்விற்கு ஒளி கொடுப்போம்” ஒரே நாளில் 9 ஆயிரம் பேர் கண் தானம் பதிவு செய்து சாதனை புரிந்த நிலையில் அந்த பதிவுகளை தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு மாநில திட்ட அலுவலர் டாக்டர் எஸ்.வி.சந்திரகுமாரிடம் ஒப்படைத்தனர்,

அப்போது பேசிய தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு மாநில திட்ட அலுவலர் டாக்டர் எஸ்.வி.சந்திரகுமார்:-

மாணவர்கள், பேராசிரியர்கள், கெடையாளர்களை வெகுவாக பாராட்டினார்,

இதுபோல் ஒரே நாளில் 9 ஆயிரம் பேர் கண்தானம் வழங்கிய நிகழ்வு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது என பெருமிதம் கொண்டார்,

மேலும் பேசிய அவர் கருவிழி பாதிப்பு காரணமாக நாட்டில் பார்வை இழப்பு 3.2 சதவீகிதமாக உள்ளது, ஆனால் தமிழகத்தில் மட்டும் 0.6 சதவிகிதமாக உள்ளது இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் அதிக அளவு கருவிழி பாதிப்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அதிகரித்துள்ளது தான் காரணம்,

தற்போது 9 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளனர், ஒரு கண்ணில் இருந்து 5 பேருக்கு பார்வை கிடைக்கும் விதமாக நவீன பாதுகாப்பு சிகிச்சை முறைகள் உள்ளது அப்படி பார்க்கும் போது தற்போது 9 ஆயிரம் பேர் கொடையாளர்களாக இருக்கும் நிலையில் ஒரு லட்சம் பேருக்கு பார்வை கிடைக்கும் அதற்கு மாணவர்கள் பேராசியர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள், கொடையாளர்கள் தான் காரணம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமெட் பல்கலைக்கழக வேந்தர் நாசே.ராமசந்திரன், இணை வேந்தர் கர்னல்.டாக்டர் ஜி.திருவாசகம் உள்ளிட்ட நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்,

மாணவர்கள், கொடையாளர்கள், பல்வேறு விதங்களில் உதவியவர்களுக்கு அரசு மற்றும் பல்கலைக்கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.